dinamalar telegram
Advertisement

செய்திகள் சில வரிகளில்... சம்பவம்

Share
கவர்னர் மாளிகையில் ஆயுத பூஜை

பெங்களூரு: பெங்களூரு ராஜ்பவனில் கவர்னர் தாவர்சந்த் கெலோட் நேற்று ஆயுத பூஜை கொண்டாடினார். ராஜ்பவன் அலுவலகத்தில் சாமுண்டீஸ்வரி உருவ படம் வைத்து மாலை அணிவித்து அலங்காரம் செய்து, ராஜ்பவன் போலீஸ் கார்ட் அறையில் பாதுகாப்பு ஊழியர்களின் ஆயுதங்களை வைத்து பூஜிக்கப்பட்டது. இதில், அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

மகன் தொழிற்சாலையில் முதல்வர்

பெங்களூரு: பெங்களூரு ஊரக மாவட்டம் தொட்டப்பள்ளாபுராவில் உள்ள தொழிற்பேட்டையில் முதல்வர் பசவராஜ்பொம்மையின் மகன் பரத்துக்கு சொந்தமான, மேக்னடிக் இன்ஜினியர்ஸ் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று முதல்வர் பசவராஜ் தன் மனைவி சென்னம்மாவுடன் சென்று பூஜை செய்தார். பின் தொழிலாளர்களுக்கு ஆயுத பஜை வாழ்த்து கூறி இனிப்பு வழங்கினார்.

மயங்கி விழுந்த சுதீப் ரசிகர்

தார்வாட்: நடிகர் சுதீப் நடித்த 'கோடிகொப்பா 3' படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. நேற்று சந்தீப், 25 என்பவர் நேற்று கோடிகொப்பா படம் பார்ப்பதற்காக தார்வாட் பத்மா திரையரங்கில் டிக்கெட் வாங்கி இருந்தார். ஆனால் படம் வெளியாகவில்லை என தியேட்டர் நிர்வாகம் டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி தந்தது. பணத்தை வாங்கி கொண்டு வெளிய வந்த சந்தீப் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளிய வைத்தனர்

தசரா ஆட்டு சண்டைஹுப்பள்ளி:

தார்வாட் ஹுப்பள்ளியில் உள்ள கமரிபேட்டையில் ஆண்டு தோறும் தசராவை முன்னிட்டு ஆட்டு சண்டை நடப்பது வழக்கம். அதுபோல இந்த ஆண்டுக்கான ஆட்டு சண்டை நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட ஆடுகளுடன் உரிமையாளரகள் பங்கேற்றனர். கடந்த ஆண்டு கொரோனாவால் எளிமையான முறையில் ஆட்டு சண்டை நடத்தப்பட்டது. இந்த முறை கொரோனா பாதிப்பு குறைந்ததால் விமரிசையாக நடந்தது.

ஆற்றில் குதித்த நபர்

பாகல்கோட்: பாகல்கோட் கலாதகி கிராமத்தை சேர்ந்தவர் சையத், 38. பழ வியாபாரியான இவர் ஐ.பி.எல்., பெட்டிங்குக்காக லட்சணக்கில் கடன் வாங்கி இருந்தார். இதை தீர்க்க முடியாமல் கட்டபிரபா ஆற்றில் குதித்தார். இவரது உடலை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.

மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்

மாண்டியா: மாண்டியா மத்துார் அருகே உள்ள ஹிட்டனஹள்ளி கிராமத்தில் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் போரய்யா, 55. இவர் மாணவியரிடம் தகாத முறையில் நடப்பதாக மாணவிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கல்வி அதிகாரிகள் வந்து மாணவிகளிடம் விசாரித்து சென்றுள்ளனர். தவறு செய்துள்ளது நிரூபிக்கப்பட்டால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து சென்றனர்.

சிறுமிக்கு பிறந்த குழந்தை

துமகூரு: துமகூரு கொரடகரே அருகே உள்ள இரகசந்திரா காலனியை சேர்ந்தவர் ரமேஷ், 25. ஆட்டோ டிரைவரான இவர் ஒரு ஆண்டுக்கு முன் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி கர்ப்பமடைந்து குழந்தை பெற்ற பின் சிறுமிக்கு திருமணம் நடந்தது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அதிகாரிகளுக்கு சிறுமிக்கு திருமணம் நடந்தது குறித்து தெரிய வந்துள்ளது. அப்போது அதிகாரிகள் இரகசந்திரா காலனிக்கு பரிசீலனைக்கு சென்றபோது ரமேஷ் குடும்பத்தினர் சிறுமியின் தாலி, மெட்டியை கழற்றி வைத்து ஏமாற்றியதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடிகேஸ்வராவுக்கு நவ., 8ல் மத்திய குழுகலபுரகி: கலபுரகி சிஞ்சோளி அருகே உள்ள கடிகேஸ்வரா கிராமத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக தினமும் நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.இதனால் கிராமத்தினர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. நிலநடுக்கம் வருவது எதனால் என்பது குறித்து ஆய்வு செய்ய நவம்பர் 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் நிபுணர்கள் குழு கடிகேஸ்வரா கிராமத்துக்கு வருக தர உள்ளது.

குதிரையில் சென்ற கலெக்டர்க்ஷ

கொப்பால்: கொப்பால் கங்காவதி அருகே உள்ள குமாரராம மலை, ஹேமா குன்று, வானி பத்ரேஸ்வரா கோவில், சிக்கபனகல், மவுரியர்கள் வீடு, மக்கும்பா மல்லிகார்ஜுனா போன்ற பகுதிகள் மலை குன்றுகளின் மீது அமைந்துள்ள பகுதிகள். இங்கு செல்ல சாலை வசதி கிடையாது. எனவே இந்த இடங்களை பார்வையிட சுற்றுலா பயணியருக்கு குதிரை சவாரி வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதை கொப்பால் கலெக்டர் விகாஸ் கிஷோர் குதிரையில் சென்று பரிசீலனை செய்தார்.

மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

விஜயபுரா: விஜயபுரா நகர பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் தொடர்பான, 'சிடி' இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும் என சிலர் 'இன்ஸ்டாகிராமில்' பதிவிட்டிருந்தனர். 'நம்ம காங்கிரஸ்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இந்த பதிவு வெளியிடப்பட்டிருந்தது. எனவே, இது குறித்து நடவடிக்கை எடுத்து பதிவு வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என, பசன கவுடா பாட்டீல் யத்னாள் ஆதரவாளர்கள் விஜயபுரா நகர போலீசில் புகார் அளித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement