dinamalar telegram
Advertisement

தேசிய விளையாட்டு போட்டி: தமிழகத்தில் நடைபெறவில்லை 

Share
திருப்பூர்:தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.சர்வதேச போட்டிகளுக்கான வீரர், வீராங்கனைகளை உருவாக்க, தேசிய போட்டிகளை, மத்திய விளையாட்டு அமைச்சகத்துடன் இணைந்து, எஸ்.ஜி.எப்.ஐ.,(இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு) ஆண்டுதோறும் நடத்துகிறது.தற்போது தொற்று பரவல் குறைந்து, தனிநபர், குழு போட்டிகளை நடத்திக் கொள்ள அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.தேசிய போட்டியை நடத்தும் மாநிலங்கள் குறித்த விபரத்தை எஸ்.ஜி.எப்.ஐ., வெளியிட்டுள்ளது.வரும் டிச., முதல் வாரம் ஓடிசாவில் கால்பந்து, ஜார்க்கண்டில் வாலிபால், ம.பி.,யில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. இரண்டாவது வாரம் சட்டீஸ்கரில் கபடி, டில்லியில் டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை, நீச்சல், பீகார், அசாமில் பளு துாக்குதல் போட்டி நடக்கிறது. நான்காவது வாரம் மகாராஷ்டிராவில் மல்லர் கம்பம் போட்டி நடக்கிறது.அடுத்த ஆண்டு (2022) ஜனவரி இரண்டாவது வாரம் திரிபுராவில் யோகா, டில்லியில் ஜூடோ, ஜிம்னாஸ்டிக். குஜராத்தில் ேஹண்ட்பால், சட்டீஸ்கரில் கோ-கோ, ஓடிசா, ஹரியானாவில் ஹாக்கி உள்ளிட்ட, 34 வகை போட்டி நடக்கவுள்ளது.இந்த போட்டிகள் நடத்தும் பட்டியலில் தமிழகத்தில் எந்த போட்டியிம் நடத்தவில்லை.கூடுதல் விபரங்களை, www.school games dfederationof india.in என்ற இணையதளத்தில் அறியலாம்; 7520065722 என்ற வாட்ஸ் அப் பில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement