dinamalar telegram
Advertisement

குன்னூரில் கடும் பனி மூட்டம்: வாகனங்கள் இயக்குவதில் சிரமம்

Share
குன்னுார்:குன்னுாரில் கடும் பனி மூட்டம் காரணமாக, சுற்றுலா வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுாரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இங்கு கடும் பனி மூட்டம் நிலவியது. தற்போது ஆயுதபூஜை விடுமுறையில், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களை ஒட்டி வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மேட்டுப்பாளையம் சாலை, லாம்ஸ்ராக், டால்பின்நோஸ் சாலைகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், 'மிஸ்ட் லைட்' பயன்படுத்தி வாகனங்கள் இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்த காலநிலையையும், ரசிக்கும் விதமாக, லாம் ஸ்ராக், டால்பின் நோஸ் செல்லும் சாலையோர தேயிலை தோட்டங்களில், சுற்றுலா பயணிகள், 'செல்பி'எடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement