dinamalar telegram
Advertisement

போலி செக் மோசடி முயற்சி: மூன்று பேர் கைது

Share
கோவை;கோவை, திருச்சி ரோட்டிலுள்ள வணிக வளாகத்தில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு இரண்டு நாட்களுக்கு முன் வந்த இரண்டு பேர், டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு நிறுவனத்தின் பெயரில், 1.34 கோடி ரூபாய்க்கான செக்கை செலுத்தினர். செக்கை பார்த்த வங்கி கிளை மேலாளர் பிரசாத் ராமகிருஷ்ணனுக்கு, சந்தேகம் ஏற்பட்டது.குறிப்பிட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டார். அதுபோன்ற எந்த 'செக்'கையும் கொடுக்கவில்லை என, அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.ரேஸ்கோர்ஸ் போலீசில் மேலாளர் புகார் அளித்தார். விசாரணையில், வங்கியில் போலி செக்கை கொடுத்து மாற்ற முயன்றதாக பீளமேடு, அண்ணா நகரை சேர்ந்த செந்தில்குமார், 45, ராமநாதபுரத்தை சேர்ந்த ஸ்ரீ ஹரிகுமார், 45, காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டை சேர்ந்த சுதீஷ், 27 ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மோசடியில் தொடர்புடைய பார்த்திபன், மற்றும் ராஜ் பரத் கிருஷ்ணன் ஆகியஇருவரை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement