dinamalar telegram
Advertisement

காற்றழுத்த மேலடுக்கு சுழற்சியால் இன்று முதல் இரு நாட்கள் மழை

Share
கோவை;காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல், 17 வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.வளிமண்டல காற்று மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இம்மாத துவக்கத்தில் இருந்து மழைப்பொழிவு காணப்படுகிறது.இருப்பினும், இரு நாட்களாக மழைப்பொழிவு குறைந்திருக்கிறது. மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், மீண்டும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியதாவது:அரபிக்கடலில் இருந்து காற்று மேலடுக்கு சுழற்சி கொங்கு மண்டலம் வழியாக வங்கக்கடல் நோக்கி நகர உள்ளது. அதனால், இன்று (15ம் தேதி) முதல், 17ம் தேதி வரை மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. நீலகிரி, சிறுவாணி, வெள்ளியங்கிரி, வால்பாறை மற்றும் பாலக்காடு கணவாய் மற்றும் கோவையின் மேற்கு பகுதிகளில், நாளை (16ம் தேதி) கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.காற்று சுழற்சி நகர்ந்தபின், 18, 19ம் தேதிகளில் மழையளவு சற்று குறைந்து காணப்படும். 20, 21ல் கிழக்கு காற்று வங்கக்கடலில் இருந்து தமிழகத்தை அடையும். அதேசமயம் இலங்கை அருகே காற்று மேலடுக்கு சுழற்சி உருவாகி அரபிக்கடலுக்கு சென்றடையும்.இதன் காரணமாக, கொங்கு மண்டலத்தில், 21 முதல், 26 வரை கன மழை கிடைக்கும். இதன்பின், தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தமிழகத்தை நோக்கி நகர்ந்து, 26 முதல் 29க்குள் வடகிழக்கு பருவ மழையை துவக்க வைக்கும்.வடகிழக்கு பருவ மழை காலத்தில், இந்தாண்டு வங்கக்கடல், அரபிக்கடல் சம வெப்பத்தை கொண்டுள்ளதால், வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னங்கள் மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தமிழகம் வழியாக அரபிக்கடலை சென்றடையும்.அதனால், மாநிலம் முழுவதும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. கடலோர பகுதிகளில் சில நாட்கள் கன மழை இருக்கும்; புயல் ஆபத்தும் உண்டு. 2022, ஜன., 15 வரை வடகிழக்கு பருவ மழை நீடிக்க வாய்ப்பிருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement