dinamalar telegram
Advertisement

வன உயிரின வார விழா :கல்லூரியில் விழிப்புணர்வு

Share
குன்னுார்:உலக வன உயிரின வார விழாவையொட்டி, குன்னுார் புராவிடன்ஸ் மகளிர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.கல்லுாரியின் தாவரவியல் துறை, சுற்றுச்சூழல் பசுமை சங்கம் சார்பில், வன உயிரின வார விழா போட்டிகள் நடத்தப்பட்டன.கோலபோட்டியில், அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் என்ற தலைப்பில், 8 அணிகள் தங்களது படைப்புகளை வெளிப்படுத்தின.இணைய வழி புகைப்பட போட்டியில், 'உங்கள் பார்வையில் இயற்கை' என்ற தலைப்பில் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.'சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும்,' என்ற தலைப்பில், மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு அடிப்படையில், வீணான பொருட்களில் பயன்தரும் படைப்புகளை உருவாக்கும் போட்டி, ஓவியம், கட்டுரை, சுலோகன் போட்டி, வினாடி-வினா, குறும்படம் தயாரிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. 'வன உயிரினங்கள், மக்கள் மற்றும் வாழ்வியல்' என்ற தலைப்பில் மாணவிகள் பேசினர். ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் ஷீலா தலைமையில், தாவரவியல் துறை பேராசிரியர்கள் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement