dinamalar telegram
Advertisement

கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடாதீர்: புலியை தேடும் வனத்துறை அறிவுரை

Share
கூடலுார்;'மசினகுடி; முதுமலை வனப்பகுதிகளை ஒட்டிய இடங்களில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம்,' என, வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.கூடலுார்; மசினகுடியில் நான்கு பேரை தாக்கி கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில், செப்., 25 முதல் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.மசினகுடியில், ஏழு நாட்கள் தென்படாத புலி, 12ம் தேதி கூடலுார் போஸ்பாரா ஒட்டிய முதுமலை பகுதியில், இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்பகுதியில், பதுங்கிய புலியை, சுற்றி வளைத்து, மயக்க ஊசி செலுத்தும் முயற்சி நடந்தது. முட்புதர் காரணமாக புலி அங்கிருந்து தப்பியது.நேற்று முன்தினம், ஒம்பட்டா பகுதியில் இருந்த தானியங்கி கேமராவில் புலி உருவம் பதிவானது. நேற்று அப்பகுதியில் வனத்துறையினர் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.இந்நிலையில், புலி மீண்டும் மசினகுடி செல்ல வாய்ப்புள்ளதால், மசினகுடி சிங்காரா பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'புலி ஏற்கனவே இரண்டு பேரை தாக்கி கொன்ற மசினகுடி கல்குவாரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், மாடுகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம்; இதனால், பாதிப்பு ஏற்படும்,' என, அறிவுறுத்தி உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement