dinamalar telegram
Advertisement

காபியில் பரவும் பூஞ்சாண நோய்: சிறு விவசாயிகளுக்கு நஷ்டம்

Share
பந்தலுார்:நீலகிரியில் தொடரும் மழை காரணமாக, காபி காய்களில் பூஞ்சாண நோய் பரவி, நஷ்டம் ஏற்பட்டுள்ளது.கோத்தகிரி, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில், காபி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடலுார்; வயநாடு பகுதிகளில் காபி வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இப்பகுதியில், பெரும்பாலான விவசாயிகள் 'ரொபஸ்டா' வகை காபியை பயிரிட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விளைச்சல் தரும் காபி தொழிலில், நடப்பு ஆண்டில் தொடர் மழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பல நாட்களாக நிலவும் மேகமூட்டம் காரணமாக, காபி பழங்கள் மற்றும் காய்களில் பூஞ்சாண நோய் பரவி வருகிறது. காய்களின் தோல் வெடித்து பழுப்பு நிறமாகி கருகி வருகின்றன.காபி விவசாயி புருஷோத்தமன் கூறுகையில், ''கடந்த காலங்களில் காபி விளைச்சல் ஓரளவுக்கு வருவாய் தந்த நிலையில், நடப்பாண்டு நன்றாக காய்த்து இருந்தது. தற்போது பூஞ்சாண நோய் பரவல் காரணமாக, காபி கொட்டைகள் அனைத்தும் வீணாகி வருகிறது.இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. காபி வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, உரிய ஆலோசனை வழங்கி, நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement