dinamalar telegram
Advertisement

கோத்தகிரியில் திருட்டு : குற்றவாளிகளுக்கு வலை

Share
கோத்தகிரி:கோத்தகிரியில் அடுத்தடுத்து, இரண்டு வீடுகளில் நடந்த திருட்டு சம்பந்தமாக, போலீசார், வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அருகே உள்ள 'ஹோப் பார்க்' பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர், தனது குடும்பத்தினருடன், தனது மகள் பிரசவத்துக்காக, சில நாட்களுக்கு முன்பு, ஓசூர் சென்றுள்ளார்.நேற்று முன்தினம், திரும்பி வந்து தனது வீட்டை பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்ட நிலையில், பீரோவில் வைத்திருந்த, ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.இதே போல, அவரது வீட்டின் அருகில் இருந்த விஜயலட்சுமி என்பவரது வீட்டில் இருந்தும், இரண்டரை பவுன் நகை, பீரோவில் இருந்து, திருட்டு போயிருந்தது தெரியவந்தது.இது குறித்து, இருவரும் கோத்தகிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement