dinamalar telegram
Advertisement

தொடர் மழையால் ஆயுத பூஜையை கொண்டாட முடியாமல் தவிப்பு

Share
பெங்களூரு:பெங்களூரில் தொடர்ந்து பெய்யும் மழையால், பெங்களூருவாசிகள் ஆயுத பூஜையை கொண்டாட முடியாமல் தவித்தனர்.

பெங்களூரில் ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மழையால் ஒரு வாரமாக பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த பலத்த மழைக்கு கோடிசிக்கனஹள்ளியில் உள்ள அய்யப்பா லே - அவுட் குடியிருப்புகளுக்குள், 3 அடி உயரத்துக்கு தண்ணீர் புகுந்துள்ளது.

மக்கள் ஆயுத பூஜைக்காக வீடுகளை சுத்தப்படுத்தி வைத்திருந்தனர். அந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பூஜை செய்ய விடாமல் செய்துள்ளது. தொழிற்சாலைகளில் நேற்று முன்தினம் இரவு இயந்திரங்களை சுத்தம் செய்து, அலங்காரம் செய்து வைத்திருந்தனர். நேற்று காலையில் திறந்து பார்க்கும் போது அங்கும் தண்ணீர் புகுந்ததால், இயந்திரங்கள் மூழ்கி விட்டன

இதனால் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 50க்கும் மேற்பட்ட கார், இரு சக்கர வாகனங்களும் வெள்ளத்தில் மூழ்கி விட்டது.அதேபோல மடிவாளா, பி.டி.எம்., லே - அவுட் பகுதியிலும் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்து இரவு முழுவதும் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.பி.பி.எம்.பி., அதிகாரிகளிடம் இரவே புகார் அளித்தாலும் யாரும் வரவில்லை என குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement