dinamalar telegram
Advertisement

கடிகேஸ்வரா கிராமத்தில் தொடர்ந்து நில நடுக்கம்: பீதியில் மக்கள்

Share
கலபுரகி:கடிகேஸ்வரா கிராமத்தில் தொடர்ந்து நில நடுக்கம் ஏற்படுவதால், பீதியடைந்துள்ள மக்கள், அரசு உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கலபுரகி சிஞ்சோலி தாலுகா தாசில்தார் அஞ்சுமா தப்சுமா கூறியதாவது:தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக, கடிகேஸ்வரா கிராமத்தில், நில நடுக்கம் ஏற்படுவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.பெண்களால் வீட்டுக்குள் அமர்ந்து சமையல் செய்ய முடியவில்லை. இரவு உறங்காமல் வீட்டுக்கு வெளியே தங்குகின்றனர்.

இவர்களின் வசதிக்காக கிராமத்தின் உயர் நிலைப்பள்ளியில், மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டு உள்ளது.பெரும்பாலான குடும்பத்தினர், வீட்டை காலி செய்து சென்றுள்ளனர். மற்றவர்கள் இம்மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு வசதியும் செய்யப்படுகிறது. ஆண்கள், பெண்களுக்கு இரண்டு ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் வெளியே தங்காமல், ஷெட்களில் தங்கும்படி கூறப்பட்டுள்ளது. மெத்தை, போர்வை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement