dinamalar telegram
Advertisement

ரத்த தான முகாம்: இளைஞர்கள் ஆர்வம்

Share
பந்தலுார்:பந்தலுார் அருகே, சேரம்பாடியில், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்; அரசு மருத்துவமனை ரத்த வங்கி; சேரம்பாடி சமத்துவ சேவை குழு; ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியவை இணைந்து ரத்த தான முகாமை நடத்தின.சேவை குழு செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். டாக்டர் மஞ்சுநாத், ரெப்கோ வங்கி கிளை மேலாளர் அஜய் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். ரத்த வங்கி டாக்டர் ஏஞ்சலின் ஐஸ்வர்யா, ரத்த பரிசோதகர் வனிதா, செவிலியர் ரெஸ்சினா குழுவினர் ரத்த சேகரிப்பு செய்தனர். பல இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து, 20 யூனிட் ரத்தம் வழங்கினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம், நிர்வாகி ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement