dinamalar telegram
Advertisement

கொப்பால் அருகே கிராமத்தில்தங்க படிமம் கண்டுபிடிப்பு

Share
கொப்பால்:கொப்பால் அருகே குக்கிராமத்தில் தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொப்பால் குஷ்டகி அருகே உள்ள நாரினாளா கிராமத்தில் சில நாட்களுக்கு முன் விவசாய தோட்டத்தில் தங்க படிமம் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த மத்திய ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியா ரிசர்ச் அமைப்பின் விஞ்ஞானிகள், நாரினாளா கிராமத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அங்கு 113 அடி ஆழத்தில் தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல் கலந்த தங்கமாக உள்ளது.

இது குறித்து மத்திய அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. நாரினாளா கிராமம், ஹட்டி தங்க சுரங்கத்தில் இருந்து 70- கி.மீ.,யில் உள்ளது. இது குறித்து கொப்பால் கலெக்டர் விகாஸ் கிஷோர் கூறுகையில், ''நாரினாளா கிராமத்தில் தங்க படிமம் உள்ளதா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தங்க படிம மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆய்வு ஆரம்ப கட்டத்தில் உள்ளது,'' என்றார்.

தங்கள் கிராமத்தில் தங்க படிமம் கிடைத்திருப்பதால் நிலத்துக்கு பல மடங்கு விலை கிடைக்கும் என்ற நில உரிமையாளர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement