dinamalar telegram
Advertisement

தடுப்பூசி வேண்டாம்:அழுது புரண்ட மூதாட்டி

Share
பாகல்கோட்:கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்த மாநில அரசும், சுகாதாரத் துறையும் போராடுகிறது.நடப்பாண்டு இறுதிக்குள், தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

பாகல்கோட் குளேதகுட்டாவின், ஜூம்மனகட்டி கிராமத்தில், நேற்று தடுப்பூசி போடும் பணிகள் நடந்தது.சுகாதார ஊழியர்கள், வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட்டனர். இதே கிராமத்தின் சுலசவ்வா கிட்டநாயகனஹள்ளி தனக்கு தடுப்பூசி வேண்டாம் என கூறி, பிடிவாதம் பிடித்ததுடன் தரையில் விழுந்து புரண்டு அழுதார்.முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படும் என எச்சரித்தும் அவர் மசியவில்லை.

'நான் தினமும் பூஜை செய்பவள்; தடுப்பூசி பெற்று, எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், யார் பூஜை செய்வர்' என, கண்ணீர் விட்டார். மூதாட்டியின் மனதை கரைத்து, தடுப்பூசி போடுவதற்குள் சுகாதார ஊழியர்கள் சோர்ந்து விட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement