dinamalar telegram
Advertisement

ஓட்டு விபரங்கள் வெளியிடப்படவில்லை

Share
காஞ்சிபுரம்:வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு, தள்ளுபடி செய்யப்பட்ட ஓட்டு விபரங்களை, மாவட்ட நிர்வாகம் இதுவரை வெளியிடாமல் உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12ம் தேதி, ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணும் பணி, ஐந்து ஒன்றியங்களிலும், ஐந்து மையங்களில் நடைபெற்றன.நான்கு வகையான பதவிகளுக்கு ஓட்டுகளை எண்ணி முடிக்க, 24 மணி நேரமானது. நேற்று முன்தினம் இரவு வரையிலும், நேற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து தெளிவான விபரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிடவே இல்லை.

தபால் ஓட்டுகள் எத்தனை பதிவானது, ஓட்டுச்சீட்டில் பதிவான ஓட்டுகள், தள்ளுபடி செய்யப் பட்ட ஓட்டுகள் என, எந்த விபரமும் வெளியிடவில்லை.ஓட்டு எண்ணும் மையங்களிலும், வேட்பாளர் வெற்றி நிலவரத்தை, செய்தியாளர்களுக்கு கடைசி வரை தெரிவிக்கவில்லை.

தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெற்றி நிலவரம் பதிவேற்றப்படும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், மிக தாமதமாகவே வெற்றி நிலவரம் பதிவேற்றப்பட்டது.குறிப்பாக, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரங்களை, ஓட்டு எண்ணும் மையங்களில், எல்.இ.டி.,திரை அமைக்கப் படும் எனப செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஇருந்தது.எந்த இடத்திலும், திரை அமைக்கப்படவே இல்லை. வெற்றி பெற்றோர் பெற்ற ஓட்டுகள், தள்ளுபடி செய்யப்பட்ட ஓட்டு விபரங்களை சேகரிக்க, காஞ்சிபுரம் மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் முயன்றபோதும், விபரங்களை பெற முடியவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement