dinamalar telegram
Advertisement

சுயேச்சையாக வென்ற நான்கு வேட்பாளர்கள்

Share
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு, நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 6ம் தேதி முதற்கட்டமாகவும், 9ம் தேதி இரண்டாம் கட்டமாகவும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.தேர்தல் ஓட்டு எண்ணும் பணிகள் கடந்த 12ம் தேதி நடந்தது. பகல், இரவு என, 24 மணி நேரம் நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கை பணியில், பல்வேறு பிரச்னைகளும் சலசலப்புகளும் இருந்தன.இருப்பினும் தேர்தல் முடிவில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை, பெரும்பாலான இடங்களை தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளுமே பெற்றிருந்தது.


நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளால் கூட எந்த இடங்களையும் பிடிக்க முடிய வில்லை.வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட 6வது வார்டில், தாமோதரன் என்பவரும், அதே ஒன்றியத்தில், 17வது வார்டில் பிரேமா என்பவரும் வெற்றி பெற்றுள்ளனர்.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், 2வது வார்டில், தியாகராஜ் என்பவரும், 7வது வார்டில், எல்லம்மாள் என்பவரும் சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ளனர்.

பா.ம.க.,வினர், 40 இடங்களில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு, இரு இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.ஆனால், உள்ளூர் செல்வாக்கை பயன்படுத்தி, மாவட்டத்தில், நான்கு பேர் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றது அரசியல் கட்சியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement