dinamalar telegram
Advertisement

வரதர் கோவிலில் நவராத்திரி நிறைவு

Share
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு பெற்றது.


இன்று மாலை, பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா 5ம் தேதி துவங்கியது. இவ்விழாவை முன்னிட்டு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பெருந்தேவி தாயாருடன் கோவிலில் உள்ள நுாறு கால் மண்டபத்தில் மாலையில் எழுந்தருளினர். அங்கு தினசரி மாலை ஊஞ்சல் சேவை நடைபெற்றது. மேலும் நவராத்திரி விழாவை தொடர்ந்து பெருந்தேவி தாயாருக்கு தினசரி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நவராத்திரி விழா நேற்று நிறைவு பெற்றது. இந்த, 10 நாட்கள் மட்டும் பெருமாளும், பெருந்தேவி தாயாரும் கண்ணாடி அறையில் அருள்பாலித்தனர்.நேற்று மாலை மஹா நவமி மண்டபத்தில், அபிஷேகம் ஆராதனை முடிந்து, பெருமாள், உப நாச்சியார், பெருந்தேவி தாயார் வெண்பட்டு உடுத்தி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.பின், நுாறு கால் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவை முடிந்து, இரவு, பெருந்தேவி தாயார் அவரது சன்னிதிக்கு சென்றார்.


பெருமாள் கண்ணாடி அறைக்கு சென்றார்.இன்று மாலை பெருமாள் குதிரை வாகனத்தில் கோவில் உள் பிரகாரத்தில் புறப்பாடு நடைபெறும். இதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அனந்தசரஸ் குளம் அருகில் வன்னிமர பார்வேட்டை உற்சவம் நடைபெறும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement