dinamalar telegram
Advertisement

சான்றிதழ் வழங்காததால் அதிருப்தி

Share
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் ஒன்றியம், உள்ளாட்சி பதவியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்படவில்லை.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்.,6, 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. இரண்டு மாவட்ட கவுன்சிலர்கள், 26 ஒன்றிய கவுன்சிலர்கள், போட்டியின்றி தேர்வான, பெரியகாட்டுப்பாக்கம் ஊராட்சி தலைவர் தவிர்த்து, 53 ஊராட்சி தலைவர்கள்; போட்டியின்றி தேர்வான பெரியகாட்டுப்பாக்கம் ஊராட்சி, ஆறு வார்டு உறுப்பினர்கள் தவிர்த்து, 402 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.அவரவர் பகுதி, ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின், வெற்றி பெற்றவர் குறித்து அறிவித்த, தேர்தல் அலுவலர்கள், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவர்களுக்கு வழங்கவில்லை.

லத்துார் உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளில், அன்றே சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், இங்கு மட்டும் வழங்கப்படாமல், வெற்றி பெற்றவர்கள் அதிருப்தி அடைந்தனர்.இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறைக்கு பின், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாளை வழங்குவதாக' தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement