dinamalar telegram
Advertisement

ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு ரயில்வே சாலையில் போக்குவரத்து நெரிசல்

Share
காஞ்சிபுரம்:ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகமானதால் ரயில்வே சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஹிந்து பண்டிகை காலங்களில், காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் மற்றும் பெரிய காஞ்சிபுரம் மார்க்கெட் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.பெரிய காஞ்சிபுரம் மார்க்கெட் சாலையில் நேற்று காலை, இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. நான்கு சக்கரம், கன ரக வாகனங்கள் தடை செய்யப்பட்டது.ராஜாஜி மார்க்கெட் அமைந்துள்ள ரயில்வே சாலையில், வழக்கமாக அனைத்து பேருந்துகளும் இயங்கின. இதனால், பூஜை பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது போன்ற பண்டிகை காலங்களில் பேருந்துகளை காமராஜர் சாலை, காந்தி சாலை வழியாக வாலாஜாபாத், செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் பேருந்துகளை திருப்பி விட்டிருக்கலாம். தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களில் காந்தி சாலையில் சாலையோர கடைகள் அதிகம் இருக்கும்; மக்கள் கூட்டம் நெரிசல் இருக்கும்.

ஆயுத பூஜை விழாவின் போது மார்க்கெட்டுக்கு சுற்றுப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் அதிகம் சென்றதால், கூட்ட நெரிசல் நேற்று காலை அதிகம் இருந்தது.ரயில்வே சாலையை கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement