dinamalar telegram
Advertisement

வாலாஜாபாத் ரயில் முனையத்தில் இயந்திர தடவாள பொருட்கள் ஏற்றுமதி

Share
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் இருந்து, சரக்கு ரயில் மூலமாக, சிமென்ட் மிக்சர் பிளான்ட் அமைப்பதற்கு, இயந்திர தடவாள பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணி துவக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், தளர்வுடன்கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரு சில தொழில்களை செய்வதற்கு, மத்திய அரசு, கட்டுப்பாடுடன் தளர்வு அளித்தது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உற்பத்தி செய்யப்படும் கார், டூ - வீலர்கள், டிராக்டர்கள், சிமென்ட் மிக்சர், ஜே.சி.பி., ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.

சமீபத்தில், வட மாநிலங்களில் சிமென்ட் மிக்சர் பிளான்ட் அமைப்பதற்கு, இயந்திரத் தடவாளப் பொருட்களை, வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் இருந்து, சரக்கு ரயில் மூலமாக ஏற்றுமதி செய்யும் பணியை, ரயில்வே துறை துவக்கி உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement