dinamalar telegram
Advertisement

ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.1.5 கோடி  பறிமுதல்

Share
கொடுங்கையூர்:காரில், ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 1.5 கோடி ரூபாயை, காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை, கொடுங்கையூர், ஜி.என்.டி., சாலையில், நேற்று முன்தினம் இரவு, கொடுங்கையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வேகமாக வந்த காரை மடக்கி விசாரித்தனர். காரில் பத்து பைகள் இருந்தன. அதனுள், கட்டு கட்டாக பணம் இருந்தது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தீவிரமாக விசாரித்தனர்.

விசாரனையில், காரில் வந்தவர்கள், ஆந்திர மாநிலம், நெல்லுாரைச் சேர்ந்த பயாஸ் மற்றும் கோபால் என தெரியவந்தது. காரில் மொத்தம் 1.54 கோடி ரூபாய் இருந்தது.இதற்கு முறையான ஆவணம் ஏதுமில்லாததால், பணத்தை அரசு கருவூலத்தில் செலுத்த முடிவு செய்துள்ளதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. பிடிப்பட்ட இருவரிடம், பணம் கொண்டு வந்ததற்கான காரணம் குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement