dinamalar telegram
Advertisement

மலபார் கோல்டு நிறுவன துாதுவரானார் நடிகர் கார்த்தி

Share
சென்னை:'மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ்' நிறுவனத்தின், 'பிராண்ட் அம்பாசிடராக' நடிகர் கார்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தங்கம் விற்பனையில், மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்திற்கு, 10 நாடுகளில், 260க்கும் மேற்பட்ட 'ஷோ ரூம்'கள் உள்ளன. தமிழகத்தின் தனித்துவமான கலாசாரத்தை கொண்டாடும் வகையில், நடிகர் கார்த்தி இந்நிறுவனத்தின் துாதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மலபார் குழும தலைவர் எம்.பி.அகமது கூறுகையில், ''இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிப்பட்ட கலாசாரம் உள்ளது.''நம் தனித்துவமான கலாசாரத்தை வெளிப்படுத்த, நடிகர் கார்த்தியை துாதுவராக ஏற்படுத்தியுள்ளோம். தமிழக மக்களுடனான உறவை மேம்படுத்த இவரை விட சிறந்த தேர்வு இருக்காது,'' என்றார்.

நடிகர் கார்த்தி கூறுகையில், ''பல நாடுகளில் வலுவான முன்னணியில் உள்ள நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி. அதேபோல், நிறுவனத்தின் நகைகளுக்கு வாழ்நாள் முழுதும் இலவச பராமரிப்பு மற்றும் நியாயமான விலைக்கான உத்தரவாதங்களை கண்டு ஆச்சரியமாக உள்ளது,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement