dinamalar telegram
Advertisement

அன்பாக பேசி 110 சவரன் சுருட்டிய பெண் கைது

Share
கிண்டி:அக்கம் பக்கத்தில் வசிப்போரிடம் பேசிப் பழகி, 110 சவரன் நகை மற்றும் 18 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.

கிண்டி, இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் சுகந்தி, 30. இவர், அக்கம் பக்கத்திலிருந்த வீடுகளுக்குச் சென்று மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர்களின் வீட்டில் ஒருவரைப் போல் பேசிப் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், விசேஷ வீடுகளுக்குச் செல்ல, தங்கை திருமணம், உறவினர் குழந்தைக்கு பெரிய அறுவை சிகிச்சை என, விதவிதமாக பொய் கூறி, ஒவ்வொரு வீடுகளில் இருந்தும், 5 முதல் 10 சவரன் நகையை வாங்கி உள்ளார்.

கணவருக்கு தெரியாமலும், ஒரு வீட்டில் நகை வாங்கியது அடுத்த வீட்டுக்கு தெரியாமலும், ஒவ்வொருவரையும் பேச்சில் மயக்கி ஏமாற்றி உள்ளார்.இந்த வகையில், 15க்கும் மேற்பட்டோரிடம் இருந்து, 110 சவரன் நகையை வாங்கி, அதை வேளச்சேரியில் உள்ள ஒரு அடகு கடையில் வைத்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி உள்ளார்.

மேலும் ஏலச் சீட்டு, வட்டிக்கு கடன் என, 10க்கும் மேற்பட்டோரிடம் இருந்து, 18 லட்சம் ரூபாய் வரை வாங்கி ஏமாற்றி உள்ளார். நகை, பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், நான்கு மாதங்களுக்கு முன், கிண்டி போலீசில் புகார் அளித்தனர்.இந்நிலையில், தலைமறைவாக இருந்த சுகந்தியை, போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement