dinamalar telegram
Advertisement

வடமாநில கொள்ளை கும்பல் ஸ்ரீபெரும்புதுாரில் பதுங்கலா?

Share
ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த துளசிதாஸ், 45, என்பவர், மர்ம நபர்கள் தாக்குதலால், கடந்த 4ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

இந்த தாக்குதலில் தப்பிய மற்றொரு டாஸ்மாக் ஊழியர் ராமு, துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தார். இந்த குண்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.இந்நிலையில், பென்னலுாரில் பெண்ணிடம் செயின் பறித்த துப்பாக்கியுடன் மிரட்டி தப்பிய வடமாநில இளைஞரை, போலீசார் கடந்த 11ம் தேதி என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஸ்ரீபெரும்புதுார் சுற்று வட்டத்தில் வடமாநில கொள்ளை கும்பல் பதுங்கி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் துப்பாக்கி இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.போலீசார் என்கவுன்டரில் கொள்ளையன் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, வடமாநில கொள்ளை கும்பல் பீதியில் உள்ளனர். இதே போல, வடமாநிலங்களை சேர்ந்தவர்களும் அச்சமடைந்து உள்ளனர்.

வட மாநிலத்தை சேர்ந்த பலர், ஸ்ரீபெரும்புதுாரை விட்டு தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல துவங்கியுள்ளனர். இதற்கிடையே, மர்ம நபர்கள் தாக்கி உயிரிழந்த டாஸ்மாக் கடை பணியாளரின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.துளசிதாஸ் குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படையில், அவரது மனைவி சுமதிக்கு, கல்வி தகுதிக்கேற்ற வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமுவிற்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கவும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
-- நமது நிருபர்- -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement