dinamalar telegram
Advertisement

இழப்பீடு பெற்றுத்தர போலீசில் மின் வாரியம் புகார்

Share
எழும்பூர்:சென்னை, பேசின்பாலம் அருகில் உள்ள, 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்திலிருந்து, மயிலாப்பூரில் அதே திறனில் உள்ள துணை மின் நிலையத்திற்கு, தரைக்கு அடியில் கேபிள் மின்வழித்தடம் வாயிலாக மின்சாரம் எடுத்து வரப்படுகிறது.

இந்த வழித்தடத்தில், எழும்பூர் காந்தி இர்வீன் சாலை சந்திப்பில், நெடுஞ்சாலை துறை சமீபத்தில் பள்ளம் தோண்டும் போது, மின் கேபிள் பழுதாகிவிட்டது.சேதமடைந்த கேபிளுக்கு நெடுஞ்சாலை துறையிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தருமாறு, மின்வாரிய அதிகாரி அருணா முரளிதரன், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement