dinamalar telegram
Advertisement

சில வரி செய்திகள்: திருவள்ளூர்

Share
கோவிலில் மரக்கன்றுகள் நடவு

திருத்தணி: திருத்தணி ஒன்றியம், தெக்களூர் கிராமத்தில் உள்ள மாணிக்க பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் திருத்தணி ரோட்டரி சங்கம் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா, அதன் தலைவர் லட்சுமிபதி தலைமையில் நேற்று நடந்தது. இதில், 15 தென்னங் கன்றுகள், 10 பழவகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.

சான்றிதழ் வழங்கல்ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில், கற்போம் எழுதுவோம் மையம் சார்பில், தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார கல்வி அலுவலர் பால்சுதாகர் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் காயத்ரி வரவேற்றார். இதில், எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள, 50 தலைமையாசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement