dinamalar telegram
Advertisement

பொது இடங்களில் குப்பை ரூ.6.43 லட்சம் அபராதம்

Share
சென்னை:சென்னையில், பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களிடம், 6.43 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:பொது இடங்களில் குப்பை கொட்டுவதால், பல்வேறு சுகாதார சீர்கேடுகளும், கட்டுமான கழிவுகளால் மழைகாலங்களில் பொதுமக்களுக்கு போக்குவரத்திற்கு இடையூறும் ஏற்படுகிறது.இதுபோன்று குப்பை கொட்டுபவர்கள் மீது, மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள், 2019ன்படி அபராதம் விதிக்கப்படும்.

அதன்படி, மூன்று நாட்களில், பொது இடங்களில் குப்பை கொட்டிய, 507 பேரிடம், 3 லட்சத்து, 19 ஆயிரத்து, 200 ரூபாய்; கட்டுமான கழிவுகளை கொட்டிய, 123 பேரிடம், 3 லட்சத்து, 24 ஆயிரத்து, 300 ரூபாய் என, 6.43 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement