dinamalar telegram
Advertisement

ரயில்வே யுடிஎஸ் செயலியில் ஸ்மார்ட் கார்டு ரீசார்ஜ் வசதி

Share
சென்னை:ரயில்வே, 'யுடிஎஸ்' மொபைல் செயலியில், 'ஸ்மார்ட் கார்டு' ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என, ரயில்வே தெரிவித்துள்ளது.

புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க, ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் உள்ளன.'ஸ்மார்ட் கார்டு' பயன்படுத்தி, இதில் டிக்கெட் எடுக்கலாம். கொரோனா தாக்கத்தால் இந்த இயந்திரங்கள் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் செயல்படுத்தப் பட்டுஉள்ளது.
பயணி இருந்த இடத்தில் இருந்தே, ரயில்களில் முன்பதவில்லா இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுக்க ஏதுவாக, 'யுடிஎஸ்' மொபைல் செயலி செயல்பாட்டில் உள்ளது. இதுவரை, தானியங்கி டிக்கெட் இயந்திரம் அல்லது டிக்கெட் கவுன்டர்களில் தான், 'ஸ்மார்ட் கார்டு ரீசார்ஜ்' செய்ய வேண்டியிருந்தது.
இனிமேல், 'யுடிஎஸ்' மொபைல் செயலி வாயிலாக, ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு, www.utsonmobile.indianrail.gov.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம் என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement