dinamalar telegram
Advertisement

விதிகள் மீறும் தொழிற்சாலைகள்

Share
கும்மிடிப்பூண்டி:மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி இயங்கும் தொழிற்சாலைகளால், மக்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் என, 260 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான தொழிற்சாலைகள், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையைச் சேர்ந்தவை.அதனால், மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டும். அதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.

இருப்பினும், சில தொழிற்சாலைகள், எந்த விதிகளையும் மதிக்காமல், காற்று, நீர் மற்றும் நிலத்தை தொடர்ந்து மாசுபடுத்தி வருகின்றன.குறிப்பாக உற்பத்தியின் போது வெளியேறும் புகையை, பல கட்ட வடிகட்டுதல் முறைக்கு உட்படுத்தி, உயரமான புகை போக்கி வழியாக வெளியேற்ற வேண்டும்.

அதைத் தவிர்த்து, கூரை வழியாக கரும்புகையை வெளியேற்றுவதால், காற்றில் மாசு துகள்கள் கலந்து வருகிறது. இதனால், கும்மிடிப்பூண்டி பகுதியில் மக்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement