dinamalar telegram
Advertisement

மகளிர் குழுவினருக்கு ரூ.11.57 கோடி கடன்

Share
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் இந்தியன் வங்கி சார்பாக, 159 மகளிர் சுயஉதவிக் குழு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு, 11.57 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவியை கலெக்டர், அல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

மேலும், கொரோனா தொற்று காலத்தில், சிறப்பாக பணியாற்றிய, 70 செவிலியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., மீனா பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement