dinamalar telegram
Advertisement

உணவகங்களில் தக்காளி சட்னி கட்

Share
திருவொற்றியூர்:தக்காளி விலை நாளுக்கு நாள், உயர்ந்து வருவதால் உணவகங்களில், தக்காளி சட்னி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும், தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது. திருவொற்றியூர், மணலி சுற்றுவட்டாரத்தில், 1 கிலோ தக்காளி, 60 முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக உணவகங்களில் இட்லி, தோசை உள்ளிட்ட சிற்றுண்டிகளுக்கு, தக்காளி சட்னி வழங்கி வந்த நிலையில், விலை உயர்வால், நிறுத்தப்பட்டுள்ளது.

மாற்றாக, புதினா மற்றும் தேங்காய் சட்னி வழங்கி வருகின்றனர். தீபாவளி முடியும் வரை, விலை உயர்வு இருக்கும் என கணிக்கும் சிறு உணவக உரிமையாளர்கள், அதுவரை தக்காளி மற்றும் கார சட்னி வழங்க முடியாது என்றனர்.தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதால், பல வீடுகளில் தக்காளி சிக்கனமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக, காய்கறி வியாபாரிகளும் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement