dinamalar telegram
Advertisement

ஏரிக்கரைகளில் பனை விதை விதைப்பு

Share
பொன்னேரி:பொன்னேரி அடுத்த, மெதுார் கிராமத்தில், மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை சார்பில், பனை விதைகள் விதைக்கும் பணிகள் மற்றும் பனை தொழில் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தன.

இதில், பொன்னேரி எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் பங்கேற்று, அங்குள்ள ஏரிக்கரைகளின் ஓரங்களில் பனை விதைகளை விதைத்தார்.மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் சார்பில், மெதுார், அரசூர், திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம், 12 ஆயிரம் பனை விதைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement