dinamalar telegram
Advertisement

புதுசா போட்ட ரோடுல பொத்தல்: முழுசா மூழ்கும் முன் சீரமைப்பாங்களா?

Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட ரோட்டில், மெகா பொதத்தல் விழுந்துள்ளது. அதற்குள் யாரோ ஆட்டாங்கல்லை போட்டு வைத்துள்ளது, காண்போருக்கு சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது.பொள்ளாச்சி நகரில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகள், கடந்தாண்டு புதிதாாக அமைக்கப்பட்டன. பெரும்பாலான ரோடுகள் தரமற்று இருப்பதாக புகார் கிளம்பியுள்ளது. அதற்கு சாட்சியாக, புதிய ரோடுகள் பல இடங்களில் சிதைந்து, பொத்தல் விழுந்து காணப்படுகின்றன.தெற்கு -- வடக்கு ராஜா மில் ரோட்டில் இருந்து, கிழக்காக பிரியும் கல்யாணி மில் ரோட்டில், மெகா பொத்தல் காணப்படுகிறது. வாகனங்கள் அதில் இறங்கி மாட்டிக் கொள்வதை தவிர்க்க, யாரோ பழைய ஆட்டாங்கல்லை கொண்டு வந்து, அந்த பள்ளத்தில் போட்டுள்ளனர்.

நடு ரோட்டில் ஆட்டாங்கல்லை புதைத்து வைத்துள்ள போல இருக்கும் இந்த காட்சி, காண்போருக்கு சிரிப்பை வரவழைக்கிறது.இதே போல், பழைய பஸ் ஸ்டாண்டில் ஒரு பள்ளத்தில் உரல் வைக்கப்பட்டுள்ளது. மகாலிங்கபுரம் ஆர்ச்சுக்கு கீழே உள்ள பொத்தலில், கற்கள் கொட்டி, பேரி கார்டு வைக்கப்பட்டுள்ளது.இதெல்லாம், நகராட்சி ரோட்டின் தரத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது. குறைந்தபட்சம், சிதைந்த ரோட்டை சீரமைக்க கூட முன்வராத அதிகாரிகளின் பொறுப்புணர்வு இல்லாதது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Ram Pollachi -

    ஆட்டாங்கல், அம்மிக்கல்லுக்கு பேரிச்சம் பழம் கிடைக்கவில்லை அதுதான் காரணம்? கட்டுமான பணிக்காக பொருட்கள் கணக்கு வழக்கில்லாம் எடுத்துச் செல்கிறார்கள் அழுத்தம் தாங்காமல் சாலைகள் பிய்ந்து விடுகிறது.

Advertisement