dinamalar telegram
Advertisement

யூரியா தட்டுப்பாடால் விவசாயிகள் தவிப்பு

Share
பொன்னேரி:சம்பா பருவத்திற்கு நடவுப் பணிகளை மேற்கொண்டு உள்ள விவசாயிகள் யூரியா கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
மீஞ்சூர் வட்டாரத்தில், சம்பா பருவத்திற்கு, 28 ஆயிரம் ஏக்கர் பரப்பில், நெல் பயிரிடப்படுகிறது. தற்போது விவசாயிகள் நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.நடவுப் பணிகளை முடித்த விளை நிலங்களுக்கு, பயிர்களின் வளர்ச்சிக்காக யூரியா போட வேண்டிய நிலையில், அது கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

கூட்டுறவு கடன் சங்கங்களில் இதுவரை 'ஸ்டாக்' வரவில்லை, தனியார் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது:ஒரு மூட்டை யூரியா, 270 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும். அரசு கிடங்குகளில் யூரியா இருப்பு இல்லை என, கையை விரித்துவிட்டனர். தனியார் விற்பனை நிலையங்களில், ஒரு மூட்டை, 300 ரூபாய்க்கு விற்பனை செய்வதுடன், இணைப்பாக ஏதாவது ஒரு மருந்து பொருட்களை கட்டாயம் வாங்க வேண்டும் என, வற்புறுத்தப்படுகின்றனர்.

அடுத்த, 10 தினங்களுக்குள் யூரியா போடாமல் விட்டால் நெற்பயிர்களின் வளர்ச்சியை பாதிக்கும். விவசாயிகளுக்கு யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:யூரியா தேவை குறித்து, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரிரு நாளில் வந்துவிடும். தனியார் விற்பனை நிலையங்களும் கண்காணிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement