dinamalar telegram
Advertisement

நிலைதடுமாறிய அரசு பஸ்: ரோட்டோரத்தில் இறங்கியது

Share
பொள்ளாச்சி,;பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், அரசு டவுன் பஸ் நிலை தடுமாறி, ரோட்டில் இருந்து சரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சியில் இருந்து, நேற்று மதியம், 2:00 மணிக்கு (வழித்தட எண், 5) அரசு டவுன் பஸ் கோபாலபுரம் புறப்பட்டது. பஸ்சில், 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.நரசிங்காபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென பஸ் நிலை தடுமாறி, ரோட்டில் இருந்து கீழே மண்ணில் இறங்கியது.ரோடு, ஒரு அடி உயரத்துக்கும் மேல் திட்டு போன்று இருந்ததால், திரும்பவும் டிரைவரால் பஸ்சை ரோட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து, அருகில் இருந்த பொக்லைன் இயந்திரம் மற்றும் பொதுமக்களின் துணை கொண்டு, பஸ் ரோட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பயணத்தை தொடர்ந்தது.அப்பகுதியில் ரோடு புதிதாக அமைக்கப்படும் நிலையில், மழை ஈரமும், ரோட்டில் சிதறிக்கிடந்த ரோடு அமைக்கும் கற்களும் சேர்ந்து, பஸ்சை நிலை தடுமாற வைத்ததாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.விதிகளுக்கு முரணாக, ரோட்டின் இரு பக்கமும் ஓரத்தில் புதிதாக அமைக்கப்படுவதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள், இதில் கவனம் செலுத்த வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Ram Pollachi -

    நேற்று முன்தினம் கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் உள்ள குழிகளுக்கு சிமெண்ட் கலவை கொட்டும் நிகழ்ச்சி கடும் போக்குவரத்து நெரிசலில் நடந்தது இப்படித்தான் இருக்கு நெடுஞ்சாலை துறையின் செயல்பாடு.

Advertisement