dinamalar telegram
Advertisement

விவசாயிகளுக்கு மண்வள பயிற்சி

Share
திருத்தணி:திருத்தணி வட்டார வேளாண் மற்றும் உழவர் நலத் துறையில் தேசிய நீடித்த நிலையான மேலாண் இயக்க திட்டத்தின் மூலம் திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம்மற்றும் சத்திரஞ்ஜெயபுரம் ஆகிய ஊராட்சிகளில், விவசாயிகளுக்கு, மண்வள அட்டை வழங்கும் பயிற்சி நடந்தது.

இதில், திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் வேதவல்லி, மண் வளம் அதன் முக்கியத்துவம், ஊட்டசத்து மேலாண்மை, இயற்கை முறையில் மண் வளத்தை பெருக்குதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.அதே போல், காக்களூர் வேளாண் அலுவலர் பார்வதி, மண் பரிசோதனை எடுக்கும் முறைகள், மண்ணின் தன்மை மற்றும் காரணிகளின் அளவு குறித்து விளக்கினார்.

மேலும் மண்வள அட்டையின் மூலம் உர வேளாண் திட்டமிடல், உர அளவு குறைந்து இயற்கை முறையில் உர மேலாண் சார்ந்த விவசாயம் குறித்து எடுத்து கூறினார்.பின், விவசாயிகளை வயல்வெளிக்கு அழைத்து சென்று மண் மாதிரி மற்றும் பரிசோதனை முறை குறித்து, செயல்முறை விளக்கம் அளித்தனர். பயிற்சியில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement