மானியத்தில் விதைகள் விவசாயிகள் எதிர்பார்ப்பு
நெகமம்:நெகமம் துணை வேளாண் விரிவாக்க மையத்தில், சிறுதானிய விதைகளை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும், என, விவசாயிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.பொள்ளாச்சி வடக்கு வட்டார கிராம விவசாயிகளுக்காக, நெகமத்தில் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்பட்டது. இவ்வலுவலகம் வாயிலாக, விதைப்புக்கு தேவையான விதைகள், உரங்கள் வினியோகிக்கப்பட்டன.இந்த மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள், தீவனப்பயிர் சாகுபடிக்கான விதைகள் விற்கப்படுகின்றன.கடந்த சில மாதங்களாக, மாதத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே திறக்கப்படுவதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தென்மேற்கு பருவமழை பெய்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், விதைப்புக்காக விவசாயிகள் உழவுப்பணியை மேற்கொண்டுள்ளனர்.விதை கொள்முதல் செய்ய விவசாயிகள் அதிகளவில் வருவதால், நெகமம் துணை வேளாண் விரிவாக்க மையத்தை திறந்து, தேவையான விதைகளை மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!