dinamalar telegram
Advertisement

கேரள எல்லையில் எரிசாராயம் பறிமுதல்

Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சியை அடுத்த கேரள எல்லை அருகே, எரிசாராயம் கடத்திய நபரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் மீனப்பிரியா தலைமையில், எஸ்.ஐ., பரமேஸ்வரன் மற்றும் போலீசார் பொள்ளாச்சியை அடுத்த கேரள எல்லைப்பகுதியான நெடும்பாறை களம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த நபர் கேரள மாநிலம் வண்ணாமடையை சேர்ந்த சரவணகுமார், 27, என்பதும், எரிசாராயம் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 10 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.ஊறல் அழிப்புகோவை ஆலாந்துறையை பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சி விற்பதாக, மதுவிலக்கு அமலாக்க போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆலாந்துறை, மத்திபாளையத்தில் வெள்ளியங்கிரி, 30, என்பவர் ஊறல் போட்டு கள்ளச் சாரயம் காய்ச்சி விற்பது தெரிய வந்தது.அவரிடம், விற்பனைக்கு தயாராக இருந்த, 15 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்ப்பட்டது. மேலும் ஊறல் போடப்பட்டிருந்த, 400 சாராயம் அங்கேயே அழிக்கப்பட்டு, வெள்ளியங்கிரி கைது செய்யப்பட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement