dinamalar telegram
Advertisement

பழைய பஸ் ஸ்டாண்டில் போதிய வசதிகள் இல்லை

Share
வால்பாறை:வால்பாறை நகரில், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, வெளியூர் செல்லும் பஸ்களும்; காந்திசிலை வளாகத்தில் இருந்து எஸ்டேட் பகுதிக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.காந்திசிலை பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமர இருக்கை, மின்விளக்கு, கழிப்பிடம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், பல மணி நேரம் காத்திருக்கும் பயணிகள், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். காந்தி சிலையை சுற்றிலும் ஆக்கிரமிப்புக்கள் இருப்பதால், மாணவர்கள் நிற்க இடம் இல்லாமல் ரோட்டில் காத்திருக்கும் நிலை உள்ளது. இங்கு, ஆக்கிரமிப்பு அகற்றி, அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement