dinamalar telegram
Advertisement

மாணவிகளுக்கு விழிப்புணர்வு

Share
வால்பாறை:சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, வால்பாறை அரசு பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கோவை சைல்டு லைன் மற்றும் சமூக நலத்துறை சார்பில், சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது.வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன், மகப்பேறு மருத்துவர் ஆனந்தி, வக்கீல் அன்புநாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெண் பாதுகாப்பு, குழந்தை திருமணம், பாலியல் தொல்லை, பெண்களுக்கான சட்டம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement