dinamalar telegram
Advertisement

பாதுகாப்பு சட்டங்கள் குறித்து அறிவுரை

Share
வால்பாறை:பெண்களின் பாதுகாப்பு குறித்து, தொழிலாளர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்று சட்ட விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தப்பட்டது.வால்பாறை மலைப்பகுதியில், 45 இடங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் நடந்த முகாமில், சட்ட தன்னார்வ பணியாளர் சுரேஷ் வரவேற்றார். முகாமில், சட்ட பணிகள் குழு உறுப்பினரும், வக்கீலுமான விஸ்வநாதன், பொதுமக்களிடம் பேசியதாவது:சட்டம் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ஏழை, எளிய மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில், கிராமங்கள் தோறும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.குறிப்பாக, திருமண பாதுகாப்பு சட்டம், வரதட்சணைக் கொடுமை சட்டம், இளம் பெண்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.பெண்கள் பாதுகாப்பின்றி வெளியே செல்வதையும், அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதையும் தவிர்க்க வேண்டும். சமீப காலமாக, வால்பாறை மலைப்பகுதியில் போக்சோ சட்டத்தின் கீழ், அதிக அளவில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.பெண் குழந்தைகளை பள்ளி, கல்லுாரிகளுக்கு அனுப்பும் போது, பாதுகாப்பாக அனுப்ப வேண்டும். குழந்தைகள் தேவையில்லாமல் மொபைல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement