dinamalar telegram
Advertisement

பள்ளி கலையரங்கம் பணி திடீர் நிறுத்தம்: அனுமதியின்றி மேற்கொண்டதால் சிக்கல்

Share
கிணத்துக்கடவு:வடசித்துாரில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துவங்கிய, அரசு மேல்நிலைப்பள்ளியில், கலையரங்கம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.கிணத்துக்கடவு அடுத்துள்ள, வடசித்துாரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டட வசதிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் போதிய அளவில் உள்ளனர்.இருப்பினும், பெற்றோர் - மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழாக்கள், இலக்கிய மன்ற கூட்டங்கள் நடத்த பள்ளி வளாகத்தில் கலையரங்கம் இல்லாதது குறையாக இருந்தது.பள்ளி வளாகத்தில், நிழல் தரும் மரங்கள் அதிகளவில் உள்ளதால், மரத்தடி நிழலில் மாணவ, மாணவியர் அமர்த்தப்பட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளியில், 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி கற்கின்றனர்.இந்நிலையில், பல ஆண்டுகளாக, பள்ளி வளாகத்தில் கலையரங்கம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பிலும் இருந்தது. இதுபற்றி, எம்.எல்.ஏ.,க்களிடமும் தெரிவிக்கப்பட்டது.பெற்றோர் - ஆசிரியர்கள் கழகத்தின் தொடர் வலியுறுத்தலால், பள்ளி வளாகத்தில் கலையரங்கம் அமைக்க, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் முழு முயற்சி மேற்கொண்டார். இதற்காக, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.கலையரங்கம் அமைப்பதற்கான பூமி பூஜை, ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முன் துவங்கியது. பணிகள் வேகமாக நடந்தது. விழா மேடை, பக்கவாட்டு அறையின் கட்டுமானப்பணி நிறைவு பெறாத நிலையில், திடீரென ஒட்டு மொத்த பணிகளும் நிறுத்தப்பட்டன.கட்டுமானப் பணிக்கான வரைபடம் தயாரிக்காமலே, பணிகள் துவங்கி விட்டதாக தெரியவந்ததால், பணி நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.நிறுத்தப்பட்டுள்ள கலையரங்க கட்டுமானப்பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட வேண்டும். பணி முடக்கத்துக்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும், என, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்துகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement