dinamalar telegram
Advertisement

வாகனங்கள் ஆக்கிரமிப்பால் அவதி: கடை வீதியில் மக்கள் திண்டாட்டம்

Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கடைவீதி, பண்டிகை தினத்தை முன்னிட்டு, வாகன நெரிசலால் திக்குமுக்காடி போனது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரும் இல்லாமல், மக்கள் திண்டாடினர்.பொள்ளாச்சி கடை வீதியில், நகைக்கடைகள், துணிக்கடைகள், பூ மார்க்கெட் என பண்டிகை தினத்துக்கு தேவையான கடைகள் அதிகம் உள்ளன. நவராத்திரி பண்டிகையின் அங்கமான, சரஸ்வதி, ஆயுத பூஜை சமயம் என்பதால், பூக்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க, மக்கள் கடை வீதியிலும், பூ மார்க்கெட்டிலும் திரண்டனர்.இதனால், ரோட்டின் பெரும்பகுதியில், வாகனங்கள் நிறுத்தி ஆக்கிரமிக்கப்பட்டது. வெளியூரில் இருந்து பூ மார்க்கெட்டுக்கு வந்த சரக்கு வாகனங்கள், மற்ற கடைகளுக்கு பொருட்கள் கொண்டு வந்த சரக்கு வாகனங்களும், நடு ரோட்டில் நிறுத்தி பொருட்களை இறக்கியதால், போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. மக்கள் நடந்து செல்லக்கூட வழியின்றி தவித்தனர்.பண்டிகை தினங்களில், நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில், போக்குவரத்தை சரி செய்யவும், நெரிசலை தடுக்கவும், போலீசார் பணி நியமிக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு, அதை போலீஸ் அதிகாரிகள் மறந்து விட்டதால், நெரிசலில் திணறும் கடைவீதியில் சிக்கிக் கொண்டு, மக்கள் விழிபிதுங்கி தவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Ram Pollachi -

    வெளி மாவட்டத்திலிருந்து பிழைக்க வரும் மக்களின் ஆசைக்கு ஒரு அளவுகோல் இல்லை. நேற்று மணம் வீசிய பூக்கள் இன்று சாக்கடையில் என்பது நினைவுக்கு வருகிறது.

Advertisement