dinamalar telegram
Advertisement

டாஸ்மாக் மதுக்கடைகளை 19ம் தேதி மூட உத்தரவு

Share
மிலாடி நபி தினத்தை முன்னிட்டு வரும், 19ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட, மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, கலெக்டர் சமீரன் அறிக்கை:கோவையிலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர உணவகங்களில் உள்ள மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் செயல்படக்கூடாது. விதிமுறைகளுக்கு முரணாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார். - நமது நிருபர் -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Ram Pollachi -

    தீபாவளிக்கு மூட உத்தரவு கொடுங்கள் பார்க்கலாம்! பாதி பிரச்சனையும் தீர்ந்து விடும்.

Advertisement