dinamalar telegram
Advertisement

சர்க்கரையின் தரம் குறைய காரணம் யார்? கூட்டுறவு ஆலை அதிகாரிகளை மாற்ற மனு

Share
மடத்துக்குளம்:அமராவதி கூட்டுறவு ஆலையில், சர்க்கரை கட்டுமானத்தை அதிகரித்து, விவசாயிகளுக்கு பாதிப்பை தவிர்க்க, திறமையான அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென கரும்பு பயிரிடுவோர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஏப்., மாதம் துவங்கி செப்., மாதம் வரை அரவை பருவமாகும். பழநி, நெய்க்காரபட்டி, கொமரலிங்கம், கணியூர், மடத்துக்குளம், உடுமலை, பகுதி விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது.நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி இரண்டரை மாதம் ஆலையை இயக்கி, 63,560 டன் கரும்பு அரவை செய்து, 49,945 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.இதில் 7.82 சதவீதம் சர்க்கரை கட்டுமானம் (ரெக்கவரி) கிடைத்தது. ஆனால், இந்த ரெக்கவரி கரும்பின் தன்மையை விட குறைவாக உள்ளதாகவும், இதனால் சர்க்கரையின் இனிப்பு தரம் குறைந்து போவதாகவும் புகார் எழுந்துள்ளது.கரும்பு பயிரிடுவோர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில், 'கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நலன் கருதி விவசாயிகள் தங்களது இழப்பை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து ஆலைக்கு கரும்பு வழங்குகின்றனர்.ஆனாலும், ஆலை நிர்வாகம் சர்க்கரை உற்பத்தியில் போதிய அளவு கட்டுமானம் எடுப்பதில்லை. கடந்தாண்டு அரவை பருவத்தில், விவசாயிகள் வழங்கிய கரும்பின் சர்க்கரை சத்து (கட்டுமானம்) சுமார் 10 சதவீதம் இருக்கக்கூடிய நிலையில், 7.82 சதவீதம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.இதற்கு ஆலையில் பணி புரியும் துறை சார்ந்த அதிகாரிகளே காரணம். இந்த குறைகள் வரும் அரவை சீசனிலும் தொடராமல் இருக்க திறமையான அதிகாரிகளை முன்கூட்டியே நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement