ஒரு போன் போதுமே! எச்சரிக்கை பலகை சேதம்
உடுமலை-செஞ்சேரிமலை ரோட்டில், புக்குளம் அருகே, எச்சரிக்கை பலகை சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்கள் ரோட்டின் வளைவில் தடுமாறுகின்றனர். எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்.எஸ்.ரவிக்குமார், உடுமலை.
நடைபாதையில் வாகன 'பார்க்கிங்'
உடுமலை தாலுகா அலுவலக வளாகத்தில், வாகனங்களை நடைபாதை மீது தாறுமாறாக நிறுத்துவதால், அங்கு வரும் மக்கள் அவதிப்படுகின்றனர். நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து, அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.ஆர். பிரபுராம், உடுமலை.
இடியும் நிலையில் பாலம்
உடுமலை யு.எஸ்.எஸ்., காலனி அருகே, மழை நீர் ஓடை மீதுள்ள பாலம் சிதிலமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. பாலத்தை சீரமைத்து, வாகன போக்குவரத்துக்கு சிரமமின்றி பராமரிக்க வேண்டும்.என். சந்திரசேகர், உடுமலை.
ஆளிறங்கு குழியால் ஆபத்து
உடுமலை ஏரிப்பாளையத்தில், பாதாள சாக்கடை ஆளிறங்கு குழி மூடிகள், ரோட்டை விட உயரமாக அமைத்துள்ளதால், வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். அந்த இடத்தில், ஆள் இறங்கும் குழியை ரோடு மட்டத்துக்கு மாற்றியமைக்க வேண்டும்.எஸ்.சந்தியா, உடுமலை.
போக்குவரத்து நெரிசலால் அவதி
உடுமலை வ.உ.சி., வீதியில், பகலில், சரக்கு வாகனங்களை நிறுத்தி, பொருட்களை இறக்குவதால், பிற வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சரக்கு வாகனங்களுக்கு நேர நிர்ணயம் செய்ய வேண்டும்.பி.சதாசிவம், உடுமலை.
ஓடையை துார்வார வேண்டும்
கிணத்துக்கடவு -- கொண்டம்பட்டி ரோட்டின் குறுக்கே செல்லும் மழைநீர் ஓடையை, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக, துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும். அப்போது தான், மழை நீர் வீணாகாமல் ஓடையில் செல்லும்.எஸ்.ரங்கராஜ், தேவரடிபாளையம்.
இடித்ததை கட்டிக் கொடுப்பாங்களா?
வால்பாறை நகராட்சி அலுவலகம் முன், இருந்த பயணிகள் நிழற்கூரை இடித்து அகற்றப்பட்டது. அங்கு, பள்ளி மாணவர்கள், பயணிகள் நலன் கருதி மீண்டும் நிழற்க்கூரை அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-க.அகிலாதேவி, வால்பாறை.
மார்க்கெட் ரோட்டில் பெரும் பள்ளம்
பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில், வெங்கட்ரமணன்வீதி சந்திப்புக்கு அருகே, பிரதான ரோட்டில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில், மழை நீரும் தேங்கி நிற்பதால், வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன. ரோடு அமைக்கும் வரை, மண் கொட்டி சீரமைக்க வேண்டும்.எம். குழந்தைவேல்,பொள்ளாச்சி.
பயணிகள் நிழற்கூரை தேவை
வடசித்துார், சமத்துவபுரத்தில் வசிப்பவர்களில் பலர் வெளியூர் வேலைக்கும், பள்ளி, கல்லுாரிக்கும் சென்று திரும்புகின்றனர். இங்கு, நிழற்கூரை இல்லாததால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் காத்திருக்கும் அவலம் நீடிக்கிறது.எம். பெருமாள்,வடசித்துார்.
மேற்கு புறவழிச்சாலையை கவனிங்க!
பொள்ளாச்சி, ஆர். பொன்னாபுரம் --- டி.நல்லிக் கவுண்டன்பாளையம் வழித்தடத்தில், மேற்கு புறவழிச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், சேறும், சகதியுமாக மாறி, வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.வி.அருணகிரி,பொள்ளாச்சி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!