dinamalar telegram
Advertisement

ஜெயந்தி -- டி.ஏ.வி., பள்ளிகள் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து

Share
Tamil News
பல்லடம், அருள்புரம் ஜெயந்தி பள்ளி மற்றும் சென்னை டி.ஏ.வி., பள்ளி நிறுவனம், கல்வி பணிக்காக கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.இவ்விரு பள்ளிகளும் கல்வி மேம்பாட்டுக்காக இணைந்து செயல்பட வேண்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி, சமீபத்தில் சென்னையில் நடந்தது.
ஜெயந்தி பள்ளி தாளாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் நீலாவதி சம்பத்குமார், பள்ளி முதல்வர் அண்ணாமலை, ஆலோசகர் நந்தகுமார், டி.வி.ஏ., பள்ளிகளின் செயலாளர் விகாஸ் ஆர்யா, துணை தலைவர் பர்மிளா கவுகார் பங்கேற்றனர்.ஜெயந்தி பள்ளி தாளாளர் கிருஷ்ணன் கூறுகையில், ''ஜெயந்தி கல்வி நிறுவனங்கள் வாயிலாக, கடந்த, 20 ஆண்டுக்கு மேலாக கல்வி சேவையாற்றி வருகிறோம். கல்வி சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில், டி.ஏ.வி., கல்வி நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சிகள் வழங்க முடியும்'' என்றார். - நமது நிருபர் -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement