dinamalar telegram
Advertisement

கல்குவாரி, கிரஷர் தடை செய்ய எம்.எல்.ஏ.,விடம் வலியுறுத்தல்

Share
கிணத்துக்கடவு,:கேரள எல்லையை ஒட்டிய, சொக்கனுார் ஊராட்சியில் செயல்படும் கல்குவாரி மற்றும் கிரஷர் செயல்பட தடை விதிக்க வேண்டும், என, எம்.எல்.ஏ.,விடம், விவசாயிகள் வலியுறுத்தினர்.கிணத்துக்கடவு மேற்கு பகுதி, கேரள மாநிலத்தை ஒட்டியுள்ளது. இப்பகுதியில், சமீப காலமாக, கல்குவாரிகள் அதிகளவில் தோன்றியுள்ளன. இக்குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கருங்கற்கள், ஜல்லிக்கற்கள் மாற்றப்பட்டு, கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இச்சூழலில், சொக்கனுார் பகுதி விவசாயிகள் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரனிடம் மனு அளித்து, குவாரி மற்றும் கிரஷர்களை தடை விதிக்க வலியுறுத்தினர்.மனுவில், சொக்கனுார் ஊராட்சி, சட்டக்கல்புதுாரில் விவசாய பூமியில் மண் தோண்டி எடுக்கப்படுவதோடு, கருங்கல் உடைப்பும் நடக்கிறது. கருங்கல் உடைப்புக்கு வெடி வைப்பதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது.
இப்பகுதியில், கால்நடை வளர்ப்பு, பயிர் சாகுபடி ஆகியன முக்கிய தொழிலாக உள்ளது. நிலத்தடிநீர் மட்டம் சரிவால், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் குறைந்து விடும்.இதனால், மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். கால்நடைகளுக்கும் குடிநீர் கிடைக்காமல் விலைக்கு வாங்க வேண்டிய அவலம் ஏற்படும். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கருங்கல்குவாரியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பரிசீலித்து நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ., உறுதி அளித்ததாக, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement