dinamalar telegram
Advertisement

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Share
சென்னை : 'அத்தியாவசிய பொருட்களை பதுக்கி, விலை ஏற்றத்திற்கு காரணமாக இருப்போரை கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்' என்று முதல்வர் ஸ்டாலினை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகத்தில் சில நாட்களாக, காய்கறிகள், பழங்கள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை, விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. பெங்களூரு தக்காளி கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாட்டுத்தக்காளி, வெங்காயம், பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

பண்டிகை மற்றும் திருமண நாட்களை முன்னிட்டு காய்கறிகளின் தேவை அதிகரிக்கும் என்பதால், அவை கிடங்குகளில் பதுக்கப்படுகின்றன.இதன் வாயிலாக ஏற்பட்ட செயற்கை தட்டுப்பாடு தான், விலை உயர்விற்கு காரணம். உளுத்தம் பருப்பு விலை கிலோவிற்கு 22 ரூபாய் அதிகரித்துள்ளது. துவரம் பருப்பு, பாசி பருப்பு, கடலை பருப்பு விலையும், 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

எண்ணெய் வகைகளின் விலையும், லிட்டருக்கு 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதரமளிகை பொருட்களான பூண்டு, புளி,கடுகு ஆகியவற்றின் விலையும் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. விலை ஏற்றத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்; அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில், மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இது மாநில அரசின் கடமை. அப்போது தான் சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்கள் சிறப்பாக வாழ முடியும். எனவே, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்காப்பணம்.. இதை உங்க முதலாளி மோடி ஐயா கிட்டே சொல்லுங்க பன்னீர்.. அவருக்கு புரியாது.. உங்களுக்காவது புரியுதா ?? புரியல்லேன்னா மக்கள் தினசரி வாங்கும் பொருட்கள் எப்படி கடைகளுக்கு வந்து சேருது, வண்டிச்சத்தம் எம்புட்டு, அது ஏன் ஏறிச்சி, டீசல் விலைக்கும் அதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கான்னு யோசிங்க.. அவரும் டீக்கடை, நீங்களும் டீக்கடை.. ஏதாவது புரியுதான்னு பாப்போம்..

 • T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா

  நீங்கள் இப்படி உண்மையை கூறக்கூடாது திமுக என்றாலே ஊழல் பதுக்கல் கொலை கொள்ளையடிப்பது எல்லாம் இருக்கத்தான் செய்யும்.

 • முருகன் -

  உங்கள் 10 ஆண்டு ஆட்சியில் ஏறிய விலைவாசி உயர்வு தான் இன்றைய நிலைக்கு காரணம்.

 • அப்புசாமி -

  அப்பா பன்னீரு... காய்கறி, பழத்தையெல்லாம் பதுக்கி வெக்க முடியாது. விலை வாசி உயர்வுக்கு முதல் காரணம் பெட்ரோல் டீட்சம் விலை உயர்வு. இரண்டாம் காரணம் மத்திய அரசு அவிங்களுக்கே குடுத்துக்கிட்ட அகவிலைப் படி உயர்வு. மூணாவது இந்திய ரூவாயின் மதிப்பு குறைந்து வருவது. முதலில் மோடி ஐயாவுக்கு கடிதம் எழுதி நிலைமையை சரி செய்யச் சொல்லு. அப்புறமா ஸ்டாலினை குறை சொல்லலாம்.

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  உங்க ஆட்சி காலத்திலும் எத்தனை முறை வெங்காய விலை முருங்கை மர உச்சிக்கு சென்றது?......பல வாரங்கள் அங்கேயே இருந்தது.....அப்பெல்லாம் கோரிக்கை வைக்கும் பொது காது கேளாதவர் போல் உங்கள் ஆட்சி இருந்ததே.....

Advertisement