dinamalar telegram
Advertisement

மண் வளத்தை மீட்க உயிர் உரம் உதவும்

Share
சூலுார்:மண் வளத்தை மீட்கஉயிர் உரங்கள் உதவும்.இவை, குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன' என, வேளாண் துறை அறிவித்துள்ளது.சுல்தான்பேட்டை வட்டாரத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னைக்கு அடுத்ததாக, தக்காளி, பீட்ரூட், வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய் மற்றும் கீரைகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. தொடர்ந்து விவசாய நிலங்களில் ரசாயன உரங்கள் பயன்படுத்தி வருவதால், மண் வளம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், விளைச்சல் பாதிக்கப்பட்டு, சாகுபடி குறையும் நிலை ஏற்பட்டு வருகிறது. இழந்த மண்வளத்தை மீட்க, விவசாயிகள் போராடும் நிலை உருவாகியுள்ளது. மண் வளத்தை மேம்படுத்த, மண் பரிசோதனை செய்து, அதற்கேற்ப ஆலோசனைகளை, வேளாண் துறையினர் வழங்கி வருகின்றனர். மேலும், குறைவான விலையில், உயிர் உரங்களையும் வழங்கி வருகின்றனர்.வட்டார வேளாண் உதவி இயக்குனர் விஜய கல்பனா கூறியதாவது:உயிர் உரங்கள் குறைந்த விலையில் வேளாண் அலுவலகத்தில் விற்பனைக்கு உள்ளன. 600 பாக்கெட் உயிர் உரங்கள், 100 லிட்டர் திரவ உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. இதில், 200 கிராம் உயிர் உர பாக்கெட் ரூ. 6; திரவ உயிர் உரம், 1 லிட்., ரூ. 300 மட்டுமே. இந்த உரங்கள் தேவைப்படுவோர், சுல்தான் பேட்டை வேளாண் அலுவலகத்தில், வாங்கிக் கொள்ளலாம். இந்த இரு உரங்களும் காய்கறி பயிர்கள், தென்னை, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.உயிர் உரங்கள் பயன்படுத்தும்போது, செயற்கை உரங்கள் பயன்பாடு கால் பங்கு அளவு குறையும். மண் வளம் மேம்படும். இதனால், பயிர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement